குழந்தைகள் நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் – நவம்பர் 2023 - ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டி (04.11.2023) - அறிவிப்பு
அன்புடையீர்,
வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 04.11.2023 அன்று “குழந்தைகள் நாள் கொண்டாட்ட நிகழ்வுகள்” கீழ்க்கண்டவாறு (ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி) நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் குழந்தைகளை பங்கு பெறச் செய்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
1. ஓவியப் போட்டி
- 4 வயது முதல் 7 வயது வரை - தலைப்பு: விலங்குகள்
- 8 வயது முதல் 14 வயது வரை - தலைப்பு: சந்திரயான்
- நேரம் || காலை:10.00 மணி முதல் 11.00 வரை
2. பேச்சுப் போட்டி
- 4 வயது முதல் 7 வயது வரை - தலைப்பு: எனக்குப் பிடித்த கார்ட்டூன்
- 8 வயது முதல் 14 வயது வரை - தலைப்பு: எனக்குப் பிடித்த புத்தகம்
- நேரம் || காலை:11.30 மணி முதல் 1.00 மணி வரை
EmoticonEmoticon